காமராஜர் பொறியியல் கல்லூரியில் 12-ஆம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் 12 -ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் 12 -ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
புதுச்சேரி அரசின் உயர்கல்வி நிறுவனமான பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 12 -ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பி. தம்பிதுரை தலைமை வகித்து, கல்லூரியின் கடந்த கால மாணவர்களின் கல்வித்தரம், கல்லூரியில் அளிக்கும் பயிற்றுவிப்பு முறை உள்ளிட்டவை குறித்து விளக்கிப்
பேசினார்.
மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா (ஆட்சியர் பொறுப்பு) சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசும்போது, உலகளாவிய அளவில் பொறியியல் கல்வியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிழிறழ. மாறிவரும் சூழல்களை மாணவர்கள் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தமது பொறியியல் கல்வி முறையை வகுத்துக்கொள்ள வேண்டும். தொழிற்கல்வி என்பது எந்த தருணத்திலும் அழியா வளத்தை நம்மிடையே வைத்திருக்கிறது. கால சூழலுக்கேற்ப, படித்த தொழிற்கல்வியை மேம்படுத்திக்கொண்டு, நமக்கும் சமுதாயத்துக்கும் பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் அறிவுரைகளை மாணவர்கள் கேட்டு நடந்துகொள்வது முக்கியம். நாட்டின் பன்முக கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பொறியியல் அறிவு இன்றியமையாததாகிறது.
பேராசிரியர்கள் கற்பிப்பை முறையாக செய்ய வேண்டும். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பயிற்றுவிப்பு இக்காலத்துக்கு மிகவும் அவசியமாகிறது என்றார் அவர்.
கணினி அறிவியில் துறைத் தலைவர் ஏ. குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொறியியல் முதலாமாண்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com