ரூ.18.50 லட்சத்தில் பூங்கா அமைக்க பூமி பூஜை

காரைக்கால் பகுதி குடியிருப்பு நகரில் ரூ.18.50 லட்சம் செலவில், அம்ரூத் திட்டத்தின்கீழ், பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பகுதி குடியிருப்பு நகரில் ரூ.18.50 லட்சம் செலவில், அம்ரூத் திட்டத்தின்கீழ், பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வள்ளியம்மை நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நகரில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைத்து தரும்படி, குடியிருப்புவாசிகள் சட்டப் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த நகரில் பூங்கா அமைப்புக்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அம்ரூத் திட்டத்தில், ரூ.18.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. காரைக்கால் நகராட்சி நிர்வாகம் இந்த பணியை ஏற்று செய்கிறது.
திட்டப்பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை வள்ளியம்மை நகரில் நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் கலந்துகொண்டு பூங்கா அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் மற்றும் பொறியாளர்கள், குடியிருப்பு நகர் முக்கிய பிரமுகர்கள், குடியிருப்புவாசிகள் கலந்துகொண்டனர்.
இந்த திட்டப்பணி 6 மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் எனவும், பூங்காவில் உடற்பயிற்சி செய்வதற்கான சாதனங்கள், நடைமேடை மற்றும் மரக்கன்றுகள் வளர்ப்பு, மின்வசதி  உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com