வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில்  திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில்  திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று, புதிதாக திறக்கப்பட்ட பள்ளியறைக்கு சுவாமிகள் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் புதிதாக  
ரூ. 3.50 லட்சம் செலவில் பள்ளியறை அமைக்கப்பட்டது. பள்ளியறை முழுவதும் கண்ணாடிகளால் வடிவமைப்பும், அலங்காரமும், சுவாமிகள் எழுந்தருள ஊஞ்சல்  அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்வாக பள்ளியறை திறப்பு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரவு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. மேடையில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாரும், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாளும் எழுந்தருளச் செய்யப்பட்டனர். திருக்கல்யாண உத்ஸவத்தில் புத்தாடை அணிவித்தல், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டு, திருமாங்கல்யதாரணம் நடைபெற்று, மகா தீபாராதனை செய்யப்பட்டது. திருமாங்கல்யதாரணத்தைத் தொடர்ந்து வாரணமாயிரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாள் திருக்கல்யாண வைபவத்தின் பெருமைகள் குறித்து பட்டாச்சாரியார் பக்தர்களிடையே விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதா ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இறைவனுக்கு மொய் எழுதும் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானமோர் அவரவர் பெயரில் ரொக்கத்தை நிர்வாகத்தினரிடம் அளித்தனர். நிகழ்ச்சி தொடர்பாக சுவாமிகள், புதிய பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனர். பள்ளியறையின் ஊஞ்சலில் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ஏ. ரங்கராஜன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com