கொண்டல் அரசுப் பள்ளி கட்டடம் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

சீர்காழி அருகே உள்ள கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கட்டட

சீர்காழி அருகே உள்ள கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கட்டட சீரமைப்புப் பணியை எம்எல்ஏ பி.வி. பாரதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்  வகுப்பறைகள், தரை தளங்கள், சுற்றுச்சுவர்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் சீர்காழி எம்எல்ஏ பி.வி.பாரதியிடம் கோரிக்கை  விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் தனது சொந்த நிதி ரூ. 2.50 லட்சத்தை பள்ளி கட்டடத்தை சீரமைக்க வழங்கினார்.இதைத்தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை எம்எல்ஏ பி.வி. பாரதி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளி வளாகத்தில் சிமென்ட் நடைபாதை அமைக்க அவரிடம்  கோரிக்கை விடுத்தனர். இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், சீர்காழி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளரை அழைத்து சிமென்ட் நடைபாதை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி அறிவுறுத்தினார். 
இந்த ஆய்வின்போது, சமூக நலத் துறை தனி வட்டாட்சியர் பாலமுருகன், அதிமுக பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, ஜெ.பேரவை நகர செயலாளர் ஏ.வி. மணி, ஊராட்சி செயலாளர் பரசுராமன்  ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com