ஊர்ப் பெயர்களின் உச்சரிப்பில் மாற்றம் செய்ய 15-க்குள் மனு அளிக்கலாம்

 நாகை மாவட்டத்தில் உள்ள ஊர்ப் பெயர்களின் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்பட வேண்டுமெனில் அது குறித்து பொதுமக்கள் மனு


 நாகை மாவட்டத்தில் உள்ள ஊர்ப் பெயர்களின் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்பட வேண்டுமெனில் அது குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்களின் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்படும் என தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பை செயல்படுத்த தமிழக அரசு உயர்நிலைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
எனவே, தங்கள் ஊர்ப் பெயர்களின் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கில உச்சரிப்பையும் அமைத்திட பொதுமக்களுக்கு கோரிக்கைகள் இருந்தால், அதனை எழுத்துப்பூர்வமாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம் - 611 003 என்ற முகவரிக்கு நேரிலும், அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் நவ. 15-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு மூலம், இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பெயர் மாற்ற பரிந்துகள் அரசுக்கு அனுப்பப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com