தயார் நிலையில் மழை, வெள்ள மீட்புக் குழுவினர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள மீட்புப் பணிகளில்  ஈடுபடுத்துவதற்காக பயிற்சி பெற்ற மழை வெள்ள

நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள மீட்புப் பணிகளில்  ஈடுபடுத்துவதற்காக பயிற்சி பெற்ற மழை வெள்ள மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார். 
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வியாழக்கிழமை (நவ.15) கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் பேரிடர் மேலாண்மை மீட்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் 170 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இக்குழுவினரை செவ்வாய்க்கிழமை சந்தித்து அறிவுரைகள் கூறியதுடன் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கஜா புயலால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மீட்புக் குழுவினர் 77 பேர், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 66 பேர், மாவட்ட வெள்ள மீட்புக் குழுவினர் 30 பேர் என மொத்தம் 170 பயிற்சிப் பெற்ற மழை, வெள்ள மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். இக்குழுவினர் நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 4 காவல் உட்கோட்டங்களிலும் குழுக்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும்  காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com