பாதுகாப்பு முகாம்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியர் சீ.சுரேஷ்குமார்

கஜா புயலிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள

கஜா புயலிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு முகாம்களில் போதிய முன்னேற்பாடுகளும், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
கஜா புயலையொட்டி, நாகையை அடுத்த சாமந்தன்பேட்டை, தெற்குப் பொய்கைநல்லூர், வடக்குப் பொய்கைநல்லூர் மற்றும் நாகையில்  தனியார் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் புயல் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு  மேற்கொண்டார். பின்னர், நாகையில்  செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கஜா புயலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு முகாம்களில் போதுமான உணவுப் பொருள்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வானிலை நிலவரம் குறித்து கடலோர கிராமங்களில் ஒலிப் பெருக்கிகள் மூலம் அவ்வப்போது அறிவிப்புகள் செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
மேலும், பொதுமக்கள் வாகனங்களில் வெகுதூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும், முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், சார் ஆட்சியர் கமல் கிஷோர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வக்குமார், வட்டாட்சியர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com