வேளாங்கண்ணி தேவாலயம் சேதம்

கஜா புயல் சீற்றத்தால் வேளாங்கண்ணி தேவாலய கோபுரத்திலிருந்த சிலுவைகள், தேவாலய

கஜா புயல் சீற்றத்தால் வேளாங்கண்ணி தேவாலய கோபுரத்திலிருந்த சிலுவைகள், தேவாலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இயேசுநாதர் சிலையின் கை பகுதிகள் தேசமடைந்தன.
வங்கக் கடலில் உருவாகியிருந்த கஜா புயலானது நாகைக்கும்- வேதாரண்யத்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலின் சீற்றத்தால் புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தின் கோபுரங்களிலிருந்த 2 சிலுவைகள், தேவாலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இயேசுநாதர் சிலையின் கைப் பகுதிகள் சேதமடைந்தன. இதேபோல், தேவாயல வளாகத்திலிருந்த மரங்களும் சாய்ந்தன. பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமானக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனியார் செல்லிடப்பேசி கோபுரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. புயலின்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லையென்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதேபோல் வேளாங்கண்ணி படகுத் துறையில் நிறுத்தி வைக்ப்பட்டிருந்த   மீடிபிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் காற்றின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு, கடற்கரைப் பரப்பிலும், கடற்கரையோர சாலைகளிலும் வீசப்பட்டன. இதனால்,  பல லட்சம் மதிப்புடைய மீன்பிடிப் படகுகளும், மீன்பிடி வலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 
வேளாங்கண்ணி மற்றும் வடக்குப் பொய்கைநல்லூர், தெற்குப் பொய்கைநல்லூர், மேலப்பிடாகை காரப்பிடாகை உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் புயல் சீற்றத்தால் சாய்ந்துள்ளன. தெற்குப் பொய்கை நல்லூரில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு முறிந்து சாய்ந்துள்ளது. கடைகள் மற்றும் குடியிருப்புகளிலும் கடல் தண்ணீர் உள்புகுந்ததால் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலானப் பொருள்களை கடல் நீரால் அடித்து சென்றுவிட்டதாகவும், குடியிருப்புகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்  வணிகர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர்.  
நாகையில் பெரியார் சிலை தேசம்: இதேபோல், நாகை நகராட்சிக்குள்பட்ட மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் சுமார் 10 அடி உயரமுள்ள பெரியார் சிலை சரிந்து கீழே விழுந்து சேதமடைந்ததது. வேளாங்கண்ணி பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள், பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்களின் மேற்பகுதிகளில் தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த ஷெட்டுகள், சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் புயல் காற்றில் பாதிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com