பெரியார் சிலை அவமதிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை, மேலக்கோட்டைவாசல் அருகே

பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை, மேலக்கோட்டைவாசல் அருகே சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலை மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயலாளர் ப. அறிவழகன், கட்சியின் திருச்சி - தஞ்சை மண்டலச் செயலாளர் சா. விவேகானந்தன், நாகை மக்களவைத் தொகுதி செயலாளர் என்.டி. இடிமுரசு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டம் காரணமாக, நாகை - திருவாரூர் சாலைப் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டன. நாகை நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை மேற்கொண்டதன் பேரில், மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டம்....
முன்னதாக, நாகை அவுரித் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும், கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com