பெருமாளுக்கு தங்க கவசம் பிரதிஷ்டை

திருநாங்கூர் உத்ஸவர் செம்பொன்னரங்கர் பெருமாளுக்கு தங்ககவசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திருநாங்கூர் உத்ஸவர் செம்பொன்னரங்கர் பெருமாளுக்கு தங்ககவசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 35-ஆவது தலமாக விளங்கும் அல்லிமாமலராள் தாயார் சமேத செம்பொன்னரங்கர்பெருமாள் கோயிலில், ராமபிரான் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பொன்னாளான பெருமாளை பிரதிஷ்டை செய்து, வழிபட்டதால் இக்கோயில் பெருமாள் செம்பொன்னரங்கர் பெருமாள் என்றழைக்கப்படுகிறார். 
இக்கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத செம்பொன்னரங்கர் பெருமாளுக்கு கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த  ஸ்ரீகல்யாணகுமார் என்ற பக்தர் ரூ. 2லட்சம் மதிப்பிலான தங்க கவசங்களை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த தங்க கவசங்கள் ஞாயிற்றுக்கிழமை பெருமாளுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com