திறன்மிக்க மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தனியார் பள்ளி ஆசிரியர்கள் திறன் மிகுந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என, தமிழக கைத்தறி மற்றும்

தனியார் பள்ளி ஆசிரியர்கள் திறன் மிகுந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்  ஓ.எஸ். மணியன் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல் அசோசியேஷன் சார்பில், தனியார்  பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு அப்துல் கலாம் விருதுகள் வழங்கும் விழா நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 விழாவுக்கு, அசோசியேஷன் மாநிலத் தலைவர் எம்.ஜே.மார்ட்டின் கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் டி.செல்வராஜ்,சி.சுந்தரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுப் பேசியது: தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில்  பள்ளி ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி அறிவைப் போதிப்பதுடன், ஒழுக்க நெறிகளையும், தமிழர் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றையும் போதிக்க வேண்டும். எதிர்கால இந்தியாவை  உருவாக்குவதில் மாணவர்கள்  முக்கியத்துவத்தைப் பெறுகிறார்கள் என்பதால், சிறந்த மாணவர்களை உருவாக்குவது  ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமை என்றார் அமைச்சர்.
 தொடர்ந்து, சமூக சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் 6 பேருக்கு, ஸ்கூல் வாய்ஸ் ஆப் எக்ஸலென்சி விருதும், 6 பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் 75 ஆசிரியர்களுக்கு அப்துல் கலாம் விருதும் அமைச்சர் வழங்கினார். 
 விழாவில், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஜி.கே.நிஜாமுதீன், கும்பகோணம்  மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆசைமணி, சிக்கல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன், இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.முஹம்மது  இஸ்மாயில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் புகழேந்தி, வீ.ராமலிங்கம், தை.லீனஸ் ஆகியோர் பேசினர்.
தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பிரைவேட் ஸ்கூல் அசோசியேஷன் மாநில இணைச் செயலாளர் எம்.ஹாரூன் இஸ்மாயில் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் எம்.பாலசிங்காரவேலு நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com