பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில், நாகை தலைமை அஞ்சலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில், நாகை தலைமை அஞ்சலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், எரிபொருள்களின் விலை உயர்வை குறைக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முகமுது இப்ராஹிம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தாஜுதீன், விவசாய அணி மாநிலச் செயலாளர் நாகை முபாரக், அப்துல் கலாம் பேரவை நிர்வாகி பாரதி செந்தமிழன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜாகிர், யூசுப்தீன், செல்வமணி, சதக்கத்துல்லா, ஜலாலுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொழிற்சங்க மாவட்டப் பொருளாளர் ஷேக் பரீது நன்றி கூறினார்.
கயிறு கட்டிப் போராட்டம்...
ஆர்ப்பாட்டத்தினிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில், போராட்டக் குழுவினர் ஓர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com