அமைச்சர் வாக்களித்தபோது பழுதான இயந்திரம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் வாக்குப் பதிவு தொடங்கும் நேரத்தில், மின்னணு வாக்குப் பதிவு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் வாக்குப் பதிவு தொடங்கும் நேரத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், முதல் ஆளாக வாக்களிக்க வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியன்  சிறிது நேரம் காத்திருந்து வாக்குப் பதிவு செய்தார்.
வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு 3-ஆம் சேத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு, முதல் ஆளாக வாக்களிக்க தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்.
அப்போது, வாக்குச் சாவடி அலுவலர்கள், வாக்குப் பதிவுக்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முதல் ஆளாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாக்களிக்கச் சென்றார். ஆனால், வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகி, வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த 7 பேர் வாக்குப் பதிவு அறையில் காத்திருந்தனர். தேர்தல் ஆணைய பொறியாளர்கள் விரைந்து வந்து இயந்திரத்தை சரிசெய்தனர். இதைத்தொடர்ந்து,  26 நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், முதல் வாக்கைப் பதிவு செய்து சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com