வாக்குச்சாவடி இடமாற்றம்: வாக்குப் பதிவு புறக்கணிப்பு

வேதாரண்யம் அருகே வாக்குச் சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதால் சுமார் 350 பேர் வாக்குப் பதிவை புறக்கணித்தனர்.

வேதாரண்யம் அருகே வாக்குச் சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதால் சுமார் 350 பேர் வாக்குப் பதிவை புறக்கணித்தனர்.
வேதாரண்யம் பகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்க நிலையிலேயே விறுவிறுப்பாக காணப்பட்டது. சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.  செட்டிபுலம் பச்சையங்காடு பள்ளி வாக்குச் சாவடியில், வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.
இதேபோல் கரியாப்பட்டினம், குரவப்புலம், புத்தூர், தென்னடார், உம்பளச்சேரி, புஷ்பவனம், வேதாரண்யம் சிகசி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல இடங்களிலும் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு, வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அண்ணாபேட்டை வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த முதியவரின் வாக்கை,  தேர்தல் அதிகாரி மாற்றி பதிவிட்டதாகப் புகார் எழுந்ததால், வேறு அதிகாரி நியமிக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதைபோல், ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் திம்மப்பநாயக்கன் குத்தகைப் பகுதியில் வாக்குச் சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சுமார் 350 பேர் வாக்குப் பதிவை புறக்கணித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com