சீர்காழியில் மிதமான மழை

சீர்காழி பகுதியில் செவ்வாய்க்கிழமை பகலில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி ஏற்பட்டது. 


சீர்காழி பகுதியில் செவ்வாய்க்கிழமை பகலில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி ஏற்பட்டது. 
சித்திரை மாதம் தொடங்கும் முன்பே சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதற்கிடையில் கத்திரிவெயிலுக்கு முன்பே தாங்க முடியாத அளவு வெயிலில் தாக்கம் இருந்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல சற்றே யோசனை செய்து சென்று வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 11மணிக்கு மேல் கருமேகங்கள் திரண்டு மிதமான மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 15 நிமிடம் பெய்த மழையால் சற்றே வெப்பம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. எனினும், பிறகு புழுக்கம் ஏற்பட்டது.  இருப்பினும் செவ்வாய்க்கிழமை முழுவதும் வெயில் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com