விவசாயிகளுக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி

திருமருகல் ஒன்றியம், நல்லுக்குடி கிராமத்தில் அட்மா விவசாயிகளுக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம், நல்லுக்குடி கிராமத்தில் அட்மா விவசாயிகளுக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் சிக்கல் கால்நடை மருத்துவர் முத்துக்குமார் பங்கேற்று, பயிற்சியைத் தொடங்கிவைத்து, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து விளக்கிக் கூறினார்.
நாட்டுக் கோழி வளர்ப்பின் மூலம் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், பராமரிப்பது, வளர்ப்பது குறித்தும் மற்றும் நாட்டுக் கோழிகளின் வகைகள், இனப்பெருக்கம் மற்றும் முட்டையிடுதல், அடை கட்டுதல், தீவனம், நோய்த் தடுப்பு குறித்தும் இம்முகாமில் விளக்கிக் கூறப்பட்டது.
திருமருகல் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். நல்லுக்குடி கிராமத்தைச் சேர்ந்த அட்மா விவசாயிகள் 40 பேர் பங்கேற்றுப் பயிற்சிப் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருமருகல் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் எழிலரசன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com