ருத்ராபதீசுவரர் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறையில் தியாகி வரதாச்சாரியார் தெருவில் எழுந்தருளியுள்ள சூலிகாம்பாள் சமேத ருத்ராபதீசுவரர்

மயிலாடுதுறையில் தியாகி வரதாச்சாரியார் தெருவில் எழுந்தருளியுள்ள சூலிகாம்பாள் சமேத ருத்ராபதீசுவரர் கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 15) விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, தேவதா அனுக்ஞை, மகா சங்கல்பம் மற்றும் தீபாராதனையுடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லெட்சுமி ஹோமம், முதல்கால பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்று, அன்று மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, கடம் புறப்பாடானது. புனித நீர் அடங்கிய கடத்தை சிவாச்சாரியார்கள் சுமந்துகொண்டு கோயிலைச் சுற்றி வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மணிகண்ட சிவாச்சாரியார் சர்வசாதகம் செய்து வைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை தியாகி வரதாச்சாரியார் தெரு மக்கள் செய்திருந்தனர். இதில், வழுவூர்  வி.ஜி.கே. மணிகண்டன், தொழிலதிபர் சிவலிங்கம், அதிமுக நகரச் செயலாளர் நாஞ்சில் கார்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com