பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

நாகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை அலுவலக வாயிலைப் பூட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திங்கள்கிழமை அலுவலக வாயிலைப் பூட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல்.ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்கவேண்டும், மாதம் 7-ஆம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்யவேண்டும், நிறுவன முன் மொழிவின்படி 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்,10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை பணி  நிரந்தர செய்யவேண்டும், ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த 3 நாள் போராட்டத்தின் முதல் நாள் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 
போராட்டத்தையொட்டி, நாகையில் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தின் முன்பு பி.எஸ். என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, அலுவலக வாயில் கதவைப் பூட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை பேருந்து நிலையம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. தேசிய தொலைதொடர்பு ஊழியர் சங்க மயிலாடுதுறை கிளைத் தலைவர் டி.செல்வராஜ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் ஆர்.சிங்காரவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெக.வீரபாண்டியன் பங்கேற்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.
இதில் சி. சேகர், பி. செந்தில்குமார், வி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பிஎஸ்என்எல் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கிளைச் செயலாளர் ஆர். பத்மநாபன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com