திருவெண்காடு கோயிலில் இந்திர திருவிழா: மருத்துவாசுரன் வதம் செய்யும் ஜதீக நிகழ்ச்சி

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திர

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திர திருவிழாவில் மருத்துவாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர்கோயில் நவகிரகங்களில் ஒன்றான புதனுக்கு தனிச்சன்னிதி உள்ளது. மேலும் சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம், இந்த கோயிலில் அகோர முர்த்தியாக தனிச்சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் ஆண்டு இந்திர திருவிழா பிப்ரவரி 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான மருத்துவாசுர சம்கார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தனது சன்னிதியிலிருந்து அகோரமுர்த்தி மேள, தாளத்துடன்,   தேவாரப் பாடல்கள் இசைத்தப்படி கோயிலை சுற்றி அலங்கார மண்டபத்துக்கு வந்தடைந்தார். 
பின்னர், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அடுத்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களால் கொன்றை மர பகுதிக்கு கொண்டு வரபட்டார். அங்கு அகோரமுர்த்தியின் சிறப்புகள் குறித்த பாடல்கள் மற்றும் வேத கோஷங்கள் இசைக்கபட்டன. இதையடுத்து, மருத்துவாசுரனை வதம் செய்யும் ஜதீக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, அகோரமுர்த்தி பூஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. இதில், கோயில் நிர்வாக அலுவலர் முருகன், கோயில் தலைமை அர்ச்சகர் கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com