பள்ளி மாணவர்களுக்குத் துணிப் பைகள் அளிப்பு

நாகை மாவட்டம், ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 152 பேருக்கு தன்னார்வ அமைப்புகள் சார்பில் துணிப் பைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நாகை மாவட்டம், ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 152 பேருக்கு தன்னார்வ அமைப்புகள் சார்பில் துணிப் பைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தவிர்த்து, துணிப் பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், "நாளை' அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சி. சிவா தலைமை வகித்தார். 
பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவ, மாணவியருக்குத் துணிப் பைகளை வழங்கினார். 
"நாளை' அமைப்பின் பொறுப்பாளர் செகுரா, "வாசல்' அமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டியதன் அவசியங்களை விளக்கிப் பேசினர். 
முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
பட்டதாரி ஆசிரியை நித்யா, பசுமைப் படை பொறுப்பாசிரியர் கி. பாலசண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com