தாமரைக் குளத்தில் 2-ஆவது நாளாக தூய்மைப் பணிகள்

பொழுதுபோக்குத் தலமாக மேம்படுத்தப்பட்டு, திறப்பு விழாவுக்கு முன்பாகவே கட்டுமான சீர்குலைவுக்கு உள்ளான, நாகை தாமரைக் குளத்தின்


பொழுதுபோக்குத் தலமாக மேம்படுத்தப்பட்டு, திறப்பு விழாவுக்கு முன்பாகவே கட்டுமான சீர்குலைவுக்கு உள்ளான, நாகை தாமரைக் குளத்தின் உள்புறப் பகுதியில், 2-ஆம் நாளாக சனிக்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பிடத்தக்க பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நாகையில், நகரின் மையப் பகுதியில் உள்ள தாமரைக் குளத்தை பொழுதுபோக்குத் தலமாக மேம்படுத்தும் பணிகள் 2012-ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்றன.   இப்பணிகள், 2015-ஆம் ஆண்டு இறுதியில் நிறைவை எட்டிய நிலையில், திறப்பு விழாவுக்கு முன்பாகவே குளக்கரையின் கட்டுமானங்கள் இடிந்து விழுந்தன. இதனால், இந்தக் குளம் இதுவரை திறப்பு விழா காணாமலேயே, பராமரிப்பின்றி உள்ளது.
இருப்பினும், தாமரைக் குளத்தின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள சிறிய கேட் வழியே தினமும் சிறுவர்கள், பெரியவர்கள் சென்று, கரையில் பொழுதுபோக்கி வருகின்றனர்.   பராமரிப்பு இல்லாததால், இந்தக் குளத்தின் கரை பகுதியில் உள்ள நடைபாதைகளில் புதர்கள் படர்ந்தன. இது, பயன்பாட்டாளர்களுக்கு அச்சம் அளிப்பதாக இருந்த நிலையில்,  நாகை நகராட்சி மூலம்,  தாமரைக் குளத்தின் கரையில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இப்பணிகள், 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றன. சுமார் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். குளக்கரை நடைபாதைகளில் படர்ந்துள்ள களைச் செடிகளை அகற்றும் பணிகள் பிரதான பணியாக நடைபெற்றது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com