கோயில் விழாக்களில் நாடகங்களுக்கு தடை விதிக்கக் கூடாது: நாடகக் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி, கிராமப்புற கோயில் விழாக்களில் நடைபெறும் நாடகங்களுக்கு தடை விதிக்கக் கூடாது என தமிழிசை நாடகக் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி, கிராமப்புற கோயில் விழாக்களில் நடைபெறும் நாடகங்களுக்கு தடை விதிக்கக் கூடாது என தமிழிசை நாடகக் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாகை மாவட்ட தமிழிசை நாடகக் கலைஞர்கள் சங்கத்தின், மண்டலப் பொதுக் குழுக் கூட்டம் மற்றும் சங்கத்தின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவர் கஞ்சனூர் நடராஜன் தலைமை வகித்தார். மன்னை தங்க. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை லெட்சுமி ராமன், செம்போடை ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ-வும், பொது தொழிலாளர்கள் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். 
 தீர்மானங்கள்: மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும். வயது முதிர்ந்த நலியுற்ற கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவேண்டும். தேர்தல் காலங்களில் நடைபெறும் கிராமப்புற கோயில் நாடகங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 சங்கத் தலைவர் பண்டரீகபுரம் ராமச்சந்திரன் வரவேற்றார். செயலாளர் சீதக்கமங்கலம் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com