வடகிழக்கு மாநில சாலைப்பணிகள் அடுத்தவாரத்தில் நிதின் கட்கரி ஆய்வு

வட கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப்பணிகளை மத்திய சாலை

வட கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப்பணிகளை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அடுத்தவாரம் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 
மேகாலயா மாநிலம் ஷில்லாங் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளை செப்டம்பர் 24ம் தேதி முதல் இரு தினங்களுக்கு ஆய்வு மேற்கொள்வதற்காக கட்கரி அங்கு செல்கிறார் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அப்போது, மேகாலயா மாநிலம் ஜோவை-ரடாசெரா இடையே 102 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள என்.எச்-6 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளை கட்கரி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். 
ரூ.683 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சாலையால் ஜோவைக்கும், ரடாசேரா இடையிலான பயண நேரம் 4 மணி நேரத்திலிருந்து 2.5 மணியாக குறையும். 
இந்த தேசிய நெடுஞ்சாலையால் ஃபாரக் பள்ளத்தாக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சிப் பெற ஏதுவாக அமையும் எனவும், இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி, இப்பிராந்தியம் வளர்ச்சிப்பாதையில் செல்ல வாய்ப்பு ஏற்படும். 
இந்த நெடுஞ்சாலைப் பாதையில் 2 இடங்களில் சுங்கக்கட்டண நுழைவாயிலும், 17 பேருந்து நிறுத்தங்களும், 2 ரோந்து போக்குவரத்து மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com