மாளவியா நகரில் சாய ஆலைகளால் மாசு: ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தில்லி மாளவியா நகரில் செயல்படும் சாய ஆலைகளால் மாசு ஏற்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தை ஆய்வு

தில்லி மாளவியா நகரில் செயல்படும் சாய ஆலைகளால் மாசு ஏற்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்யுமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 
தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் - நீதிபதி ஆதர்ஷ் கோயல் தலைமையிலான அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவைக் கேட்டுக் கொண்டது. 
மேலும், "புது தில்லி, மாளவியா நகரில் உள்ள கிர்க்கி எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ஆர்-85 தளத்தில் சாயம் மற்றும் ரசாயன வணிகம் நடைபெறுவதாக புகார் தெரிவித்து தபாலில் வந்த கடிதம் அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 மேலும், இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் மூலம் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால், அப்பகுதியில் வசிப்போருக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால், இந்தக் புகார்கள் விசாரித்து, ஒரு மாதத்திற்குள் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஒவ்வொரு உத்தரவும் நீதிமன்றத்தின் உத்தரவு போல கட்டுப்பட்டதாகும். 
இந்த உத்தரவைப் பின்பற்றாதபட்சத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், 2010-இன்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்படும்' என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டு , இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 24-க்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்தது. 
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக மாளவியா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில் மாளவியா நகரில் செயல்படும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் காற்று மாசுவுக்கும், இப்பகுதியில் வசிப்போரின் உடல் நலத்திற்கும் தீங்கை ஏற்படுத்துகிறது என புகார் தெரிவித்திருந்தனர். 
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com