காஜியாபாதில் பெட்ரோல் நிலையம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

காஜியாபாதில் பெட்ரோல் விநியோக நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தாக்கல்

காஜியாபாதில் பெட்ரோல் விநியோக நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. காஜியாபாதில் பெட்ரோல் விநியோக நிலையம் திறப்பதற்கு காஜியாபாத் வளர்ச்சி ஆணையம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
காஜியாபாத் குடியிருப்புவாசி கமல் தாக்கல் செய்த அம்மனுவில், "உத்தரப் பிரதேச நகர்ப்புற திட்டத்தின் ஷரத்துகளின் கீழ் வெளியிடப்பட்ட காஜியாபாத் மாஸ்டர் பிளான் -2021-ஐ மீறும் வகையில் பசுமைப் வளையத்தில் பெட்ரோல் விநியோக நிலையம் அமைக்க இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ரகுவேந்திர எஸ். ரத்தோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜராகவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் பிப்ரவரி 13-ஆம் தேதி தீர்ப்பாயத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.முன்னதாக, பெட்ரோல் விநியோக நிலையத்தை பசுமை வலையப் பகுதியில் அமைக்க அனுமதி அளித்ததற்காக காஜியாபாத் வளர்ச்சி ஆணையத்திற்கு தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது. 
மேலும், தீர்ப்பாய அமர்வு, "பசுமை வலையத்தில் நீங்கள் எப்படி பெட்ரோல் நிலையத்திற்கு அனுமதி அளிக்க முடியும்? எந்த சட்டத்தின் கீழ் தடையின்மை சான்றிதழை நீங்கள் அளித்திருக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம். இந்த நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் மீது எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. இதே முறையில் எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆணையமும் அனுமதி அளிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதை நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com