தலைநகரில் இருந்து பிற மாநில நகரங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை: தில்லி போக்குவரத்து நிறுவனம் திட்டம்

தலைநகரில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையை மீண்டும் தொடங்க தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) திட்டமிட்டு வருகிறது.

தலைநகரில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையை மீண்டும் தொடங்க தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) திட்டமிட்டு வருகிறது.
டிடிசி மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த பேருந்து சேவை பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
தில்லியில் இருந்து அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்டவற்றில் உள்ள நகரங்களுக்கு தில்லி போக்குவரத்து நிறுவனம் பேருந்து சேவையை இயக்கி வந்தது. இந்த சேவை பயணிகளிடம் மிகவும் பிரபலமாகவும் இருந்து வந்தது. எனினும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவை நிறுத்தப்பட்டது. பிற மாநிலங்களில் பேருந்துகளுக்கு நிரப்பப்படும் சிஎன்ஜி எரிவாயு நிலையங்கள் இல்லாததன் காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டதாக
கூறப்படுகிறது. தற்போது இந்த சேவையை மீண்டும் தொடங்குவதற்கு டிடிசி திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியிலிருந்து மீரட், ஹப்பூர் போன்ற அருகில் உள்ள பகுதிகளுக்கு பேருந்து சேவையை அளித்தோம். 2010-ஆம் ஆண்டில் இருந்ததுபோல் இல்லாமல், தற்போது சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையங்கள் அண்டை மாநிலங்களில் உள்ளன. மேலும், தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள இந்தரப்பிரஸ்தா கேஸ் நிறுவனம் இதற்கான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. 
இதனால், முதல் கட்டமாக இந்தப் பேருந்து சேவையை ஹரித்வார், சண்டீகர், மீரட், ஆக்ரா போன்ற நகரங்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த நகரங்கள் எல்லாம் தில்லியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளன. மேலும், இந்த நகரங்களை நோக்கிச் செல்லும் சாலைகளில் சிஎன்ஜி எரிவாயு நிலையங்கள் அமைந்துள்ளன என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com