நரேலா: காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி நரேலாவில் காலணி தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி நரேலாவில் காலணி தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
தில்லி நரேலா பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்குள்ள காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 
இதையடுத்து, இத்தீயானது அருகில் உள்ள சில தொழிற்சாலைகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு உடனடியாக 14 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணி முடுக்கிவிடப்பட்டது. 
இந்த தீ விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல் ஏதும் பதிவாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்தும், சேத மதிப்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தில்லி கரோல் பாகில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் எதிரொலியாக தீப் பாதுகாப்பு விஷயங்களில் விதி மீறலில் ஈடுபட்டதாக பல ஹோட்டல்களின் தடையின்மைச் சான்றிதழை தில்லி அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com