100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சி பகுதியில் வசிக்கும் பயனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி, அகில இந்திய


அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சி பகுதியில் வசிக்கும் பயனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அகஸ்தீசுவரம் ஒன்றியக் குழுச் செயலர் கே.எஸ். லட்சுமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம். வாசுகி, எம். ஜான்மேரி, எம். சுதாராணி, எம். குமாரி, கே. இசக்கிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மலைவிளை பாசி போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
மாவட்ட, வட்டார நிர்வாகிகள் எஸ்.எஸ். சந்திரன், ஏ. பழனி, எம். சுரேஷ், எஸ். தர்மலிங்கம், பி. மணிகண்டன், எம். சிவதாணு, பாலகிருஷ்ணன், எம். அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் உடனடியாக 100 நாள் வேலை வழங்கவேண்டும். அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள தினக்கூலி ரூ. 224 வழங்க வேண்டும். இப்பணியாளர்களுக்கு நீர்நிலைகளை பராமரித்தல், குளங்களை ஆழப்படுத்துதல், வாய்க்கால்களை தூர்வாருதல், மரம் நடுதல், மண் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட வேலைகள் வழங்கப்படவேண்டும். கடைவரம்புப் பகுதிகளில் தண்ணீர் தடையின்றி செல்ல அனைத்துக் கால்வாய்களையும் தூர்வார வேண்டும். தனியார் தோட்டங்களில் வேலைசெய்யும் ஆண் தொழிலாளர்களின் வேலைகளைப் பறிக்கக்கூடாது. தூய்மைத் திட்டப் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவர் என்.எஸ். கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com