அஞ்சுகிராமத்தில் புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசு அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில்  புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில்  புதன்கிழமை நடைபெற்றது.
இது குறித்து, குமரி மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு  நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கால்நடைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்,  ஏழை பெண்களின் கல்வியை உயர்த்துவதற்கு பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமணத்திற்கு திருமண நிதியுதியாக ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும், தாலிக்கு தங்கம் வழங்கிய திட்டங்கள் குறித்தும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மக்கள் நல வாழ்வுத்துறையின் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதியுதவி மகப்பேறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு  திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்தனர் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com