4 ஊராட்சிகளில் இலவச கறவைப் பசு பயனாளிகள் இன்று தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ.16) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் 4 ஊராட்சிகளில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ.16) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் 4 ஊராட்சிகளில் கறவைப் பசு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதம் வழங்கப்படவேண்டிய கறவைப் பசுக்களுக்கான பயனாளிகள் தேர்வு, அகஸ்தீசுவரம்  ஊராட்சி ஒன்றியம் தேரேகால்புதூர் மற்றும் மகாராஜபுரம் கிராம ஊராட்சிகளிலும், தோவாளை ஊராட்சி ஒன்றியம் லாயம் மற்றும் ஞாலம் ஆகிய ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை (நவ.16) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் நடைபெற உள்ளது. 
தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக கால்நடை உதவி மருத்துவர், ஊராட்சி ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் ஆதிதிராவிட உறுப்பினர்கள் செயல்படுவர். 
தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரால் இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு கறவை பசு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனாளிகளாக பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். ஏற்கெனவே இலவச கறவை பசுக்கள் பராமரித்து வரும் பயனாளிகளுக்கு வழங்க இயலாது. 30 சதவீதம் ஆதிதிராவிட வகுப்பினர் தேர்வு செய்யப்படுவர்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கு பெற்று, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com