தக்கலையில் கிராம ஊழியர் சங்கத்தினர் தர்னா

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தக்கலையில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தக்கலையில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தக்கலை (கல்குளம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வட்டத் தலைவர்  எம்.கீதா தலைமை வகித்தார். வட்டச் செயலர் பிரைட் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.நாராயண கிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இதில், வட்டப் பொருளாளர் பீட்டர் ஜார்ஜ், துணைத் தலைவர் மஞ்சு, துணைத் தலைவர் ரீபாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம், பழைய முறையிலான ஓய்வூதியம், ஜமாபந்தி படி, இயற்கை இடர்பாட்டுக்கு  சிறப்பு படி உள்ளிட்டவை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும் , 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைத்தும் வழங்க வேண்டும். கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com