புதுக்கடை-பரசேரி சாலையை  உடனே சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்: கிள்ளியூர் எம்.எல்.ஏ

வாகன ஒட்டிகளுக்கு அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி உயிர் பலிவாங்கும் புதுக்கடை-பரசேரி சாலையை உடனே

வாகன ஒட்டிகளுக்கு அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி உயிர் பலிவாங்கும் புதுக்கடை-பரசேரி சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர்  செய்தியாளர்களிடம் கூறியது: புதுக்கடை -பரசேரி சாலை ஒரமாக  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. அப்போது தரமான குழாய்கள் பதிக்காத காரணத்தால் தண்ணீரின்அழுத்தம் காரணமாக அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கொல்லாய், திக்கணங்கோடு, மத்திகோடு, அரித்திரான்விளை, கருக்குப்பனை, மானான்விளை, கருங்கல், பாலூர், மாங்கரை, கிள்ளியூர், புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் காணப்படுகின்றன. 
   இந்த பள்ளத்தில் அடிக்கடி வாகன ஓட்டிகள் விழுந்துவிபத்துக்குள்ளாகின்றனர்.  கடந்த திங்கள்கிழமை பைக் பள்ளத்தில் தவறி விழுந்ததில் மேள்சி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் கண்டுகொள்ளாமல் அலட்சியத்தோடு செயல்படுகின்றனர். எனவே, உயிர்பலி வாங்கும் இச்சாலையில் உள்ள பள்ளங்களை உடனே சீரமைக்க வேண்டும்.  இல்லையெனில் பொதுமக்களை திரட்டி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com