மண்டல பூஜை: வெங்கஞ்சி கோயிலுக்கு இன்று எழுந்தருளும் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நிகழாண்டு நடைபெறும் மண்டல கால பூஜைக்காக, பத்ரகாளி அம்மன்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நிகழாண்டு நடைபெறும் மண்டல கால பூஜைக்காக, பத்ரகாளி அம்மன் வெங்கஞ்சி பகுதியில் உள்ள தூக்கத் திருவிழா கோயிலுக்கு சனிக்கிழமை எழுந்தருளுகிறார். இதைத் தொடர்ந்து 41 நாள்கள் பூஜை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் தாய் கோயிலும், வெங்கஞ்சியில் தூக்கத் திருவிழா கோயிலும் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்கத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். 
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி முதல் 41 நாள்கள் மண்டல கால சிறப்பு பூஜைகள் ஒருவருடம் தாய் கோயிலிலும், மறுவருடம் வெங்கஞ்சி தூக்கத் திருவிழா கோயிலிலும் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி,  நிகழாண்டு சனிக்கிழமை (நவ. 17) முதல் மண்டல கால பூஜை 41 நாள்கள் வெங்கஞ்சி தூக்கத் திருவிழா கோயிலில் நடத்தப்படுகிறது. இதற்காக பத்ரகாளி அம்மன் வட்டவிளை கோயிலில் இருந்து வெங்கஞ்சி கோயிலுக்கு சனிக்கிழமை பிற்பகலில் கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு காலை, மாலை வேளையில் அம்மனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. 41 நாள்களுக்குப் பின் பத்ரகாளி அம்மன் வட்டவிளை தாய் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜைகள் நடத்தப்படும் என கோயில் செயலர் மோகன்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com