அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவசியம்: பள்ளி விழாவில் கனிமொழி பேச்சு

அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவசியம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். 

அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவசியம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். 
தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதி  ரூ.15 லட்சத்தில் தக்கலை அமலா கான்வென்ட்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியதாவது: போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் பாடப் புத்தகம் மட்டும் படித்தால் போதாது.  அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். நூலகங்களுக்கு சென்று அறிவு சார்ந்த புத்தகங்களை தேர்வு செய்து படிக்கவேண்டும்.
இன்றைய விஞ்ஞான உலகில் நாட்டு நடப்பை, புதிய தொழில்நுட்பங்களை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மாணவிகள் நல்ல விஷயங்களை தேர்வு செய்து அறிவுத் திறனை மேன்மேலும் வளர்த்துக் கொண்டால் பல  சாதனைகளை நிகழ்த்த முடியும். பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. உங்களுடைய கனவுகளை, லட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள் என்றார். பின்னர் மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் நிக்கோலா ராணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கரோலின் புஷ்பலலிதா முன்னிலை வகித்தார்.   பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியை லீமா ரோஸ்லி , முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் , முன்னாள் ஐ.ஜி. ஜாண் நிக்கல்சன், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை லில்லி திரேசா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சகாய ரபேல் பரட்சன்,  வர்க்கீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக தக்கலைக்கு வந்த கனிமொழியை பத்மநாபபுரம் நகர செயலர் மணி,  முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரேவன் கில்,  நிர்வாகிகள் ராஜேந்திர ராஜ், ஜூட் சேம்,  வழக்குரைஞர் முத்துகுமரேஷ்,  சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
குலசேகரம்: திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் பழங்குடி மற்றும் மலை வாழ்மக்களுக்கு மின்சாரம், சாலை என அதிக வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி பேசினார். 
பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் மேல் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை  நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பேச்சிப்பாறை ஊராட்சி ஆண்டிபொற்றை பழங்குடி குடியிருப்பில் ரூ. 29 லட்சத்தில் குடிநீர்த் திட்டம், ரூ. 20 லட்சத்தில் பழங்குடியினர் திறன்மேம்பாட்டு மையம்,  பேச்சிப்பாறை அரசு உண்டுறை மேல்நிலைப் பள்ளியில் ரூ. 16 லட்சத்தில் விளையாட்டுத் திடல்,  திருநந்திக்கரை மற்றும் செறுகோல் அரசுப் பள்ளிகளில் தலா ரூ. 12 லட்சம் மதிப்பில் இரு  வகுப்பறைக் கட்டடங்கள் திட்டங்களை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம்   அடிக்கல் நாட்டியும், திறந்து வைத்தும் அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு, மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சாம்கிறிஸ்டோபர் வரவேற்றார்.  பேச்சிப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். ராஜன்,  கல்வி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாரத் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  ஆசிரியர்  நாகப்பன் நன்றி கூறினார். 
முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், திமுக திருவட்டாறு ஒன்றியப் பொறுப்பாளர் ஜான் பிரைட், கட்சி அவைத் தலைவர் பப்புசன்,  குமரி மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் அலாவூதின், மாவட்ட பிரதிநிதிகள் ஜோஸ்எட்வர்ட், மவுண்ட்மேரி மனோகரன், திற்பரப்பு பேரூர் செயலர் பி. வின்சென்ட், திற்பரப்பு பேரூராட்சி  முன்னாள் கவுன்சிலர்கள் யோபு, ஜாண்எனேசர்,  மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெ.எம்.ஆர். ராஜா,   இலக்கிய அணி தலைவர் வில்சன்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com