மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆய்வு

மார்த்தாண்டம் மேம்பாலத்தை எஸ். விஜயதரணி எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மார்த்தாண்டம் மேம்பாலத்தை எஸ். விஜயதரணி எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் வெட்டுவெந்நி பகுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மார்த்தாண்டத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க இப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என 2011 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தேன்.   அப்போது 2 தூண்களுடன் மேம்பாலம் அமைக்க வரைபடமும் கொடுத்திருந்தேன். 
ஆட்சி மாற்றத்துக்குப் பின் மத்திய அரசு அதில் சில மாறுதல்களை செய்து ஒற்றைத் தூணாகவும்,  இரும்பாலும் பாலத்தை அமைத்துள்ளது.  
இந்தப் பாலத்தின் தரத்தை  உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்தப் பாலத்தை ஆபத்தான நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும்  என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த மேம்பாலம் கட்டுமான நிறுவன பொறியாளர் ஒருவர், இப் பாலத்தின் தன்மை குறித்தும், அதன் உறுதித்தன்மை குறித்தும் அவரிடம் விளக்கி கூறினார்.
எம்.எல்.ஏ. விஜயதரணியுடன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மனித உரிமை துறை தலைவர் இ.ஜி. ரவிசங்கர்,  குழித்துறை நகரத் தலைவர் அருள்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com