அன்னை ஆதா மியூசிக் அகாதெமி, ஆதா டெக்ஸ் தொடக்க விழா

அழகியமண்டபத்தில் அன்னை ஆதா மியூசிக் அகாதெமி மற்றும் ஆதா டெக்ஸ் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அழகியமண்டபத்தில் அன்னை ஆதா மியூசிக் அகாதெமி மற்றும் ஆதா டெக்ஸ் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்னை ஆதா மியூசிக் அகாதெமியை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் திறந்துவைத்து, ஆதா டெக்ஸ் லோகோவை அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, தையல் திருவிழாவில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்ற முளவிளையைச் சேர்ந்த மெர்லின் ஜெயாவுக்கு தங்க ஊசியைப் பரிசாக வழங்கினார். 
இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ரொபர்த்தோ மர்கோரி, மர்சல்லோ மன்சினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று தையல் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளை வழங்கினர். விழாவில், ஆசிரியர் திலகம் பெற்ற ஜோஸ்பிரகாஷ், கலைத்திலகம்  பட்டம் பெற்ற ஜெர்சியா, ரேணுகா ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கப்பட்டன. முள்ளங்கனாவிளை மற்றும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
ஆதா மைய இயக்குநர் ஜோஸ் ராபின்சன் வரவேற்றார். அருள்பணியாளர் காட்வின் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com