குமரி மாவட்டத்தில் மூலிகை பண்ணை அமைக்க பரிசீலனை: பொன்.ராதாகிருஷ்ணன்

குமரி மாவட்டத்தில் மூலிகைப்பண்ணை அமைப்பது குறித்து  பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

குமரி மாவட்டத்தில் மூலிகைப்பண்ணை அமைப்பது குறித்து  பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இது குறித்து அவர் நாகர்கோவிலில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கன்னியாகுமரி மாவட்டத்தில்,  நிகழாண்டில்  மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள், நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டுமானால் துறைமுகம் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.  மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.  நெல், வாழை, தென்னை, ரப்பர் பயிர்கள் மேம்பாடு அடைய என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தி வருகிறோம். குமரி மாவட்டத்தில் மூலிகைப்பண்ணை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.   இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மருத்துவமனை அமைக்க நிலம் தேர்வு செய்து தருவது மாநிலஅரசின் பொறுப்பு.  ஆசாரிப்பள்ளத்தில் இதற்காக இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. 
மருத்துவமனை அமைத்திட 5 ஏக்கர் நிலம் தேவை.   மீதியுள்ள இரண்டரை  ஏக்கர் நிலத்தை மத்திய அரசு ரூ. 21 கோடி கொடுத்து வாங்கத் தயாராக உள்ளது. ஆனால் மாநிலஅரசுதான் இடம் வழங்கவில்லை என்றார் அவர்.
 பேட்டியின்போது, பாஜக குமரி மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com