நாகர்கோவிலில் நாளை குமரி மகாசபா ஆண்டு விழா: உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி பங்கேற்பு

குமரி மகாசபாவின் 6ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் சனிக்கிழமை (ஜன. 19) நடைபெறுகிறது. இதில், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி பங்கேற்கிறார். 

குமரி மகாசபாவின் 6ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் சனிக்கிழமை (ஜன. 19) நடைபெறுகிறது. இதில், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி பங்கேற்கிறார். 
நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனர்- தலைவர் எம். ராவின்சன் தலைமை வகிக்கிறார். மது சிக்ரி குத்துவிளக்கேற்றுகிறார். செயல்பாட்டுக் குழு உறுப்பினர் ஏ. தம்பிராஜ் அறிமுக உரையாற்றுகிறார். கெளரவத் தலைவர் கே. சொக்கலிங்கம் வரவேற்கிறார். செயலர் ஒய்.ஆர். ஜான்சன் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கிறார்.
துணைத் தலைவர் பி. சந்திரமோகன் குமரி மகாசபாவின் வளர்ச்சியுரையாற்றுகிறார். அமைப்பின் செயல் திட்டங்கள் குறித்து துணைத் தலைவர் ஜேசர் ஜெபநேசன் உரையாற்றுகிறார். 
குளோபல் குமரியன்ஸ் மீட் 2019 குறித்து அதன் செயலர் என். ஆஸ்டின் உரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ. விஜயகுமார், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மைக்கேல் வேத சிரோண்மணி, ஜிண்டால் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ், குமரி மகாசபா சென்னை பிரிவின் தலைவர் ஏ.சசிகுமார், பெங்களுரூ பிரிவின் தலைவர் பி.கோலப்பன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி பங்கேற்று "சட்டமும் ஜனநாயகமும்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். பொருளாளர் எம். ஜெயநேசகுமார் நன்றி கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com