முத்தலக்குறிச்சி தர்ம சாஸ்தா கோயிலில் பட்டாபிஷேக விழா

முத்தலக்குறிச்சி ஸ்ரீகூனான்காணி தர்மசாஸ்தா கோயிலில் 79ஆவது பஜனை பட்டாபிஷேகம், மகரவிளக்கு பெருவிழா, பொங்கல் திருவிழா ஆகியவை நடைபெற்றன. 

முத்தலக்குறிச்சி ஸ்ரீகூனான்காணி தர்மசாஸ்தா கோயிலில் 79ஆவது பஜனை பட்டாபிஷேகம், மகரவிளக்கு பெருவிழா, பொங்கல் திருவிழா ஆகியவை நடைபெற்றன. 
இதையொட்டி திங்கள்கிழமை கணபதி ஹோமம், செந்தில் முருகன் போற்றி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை, பஜனை பட்டாபிஷேகம், உச்ச பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பொங்கல் வழிபாடு, சிறப்பு தீபாராதனை, குடும்பங்கள் சங்கமிக்கும் விழா, உச்சபூஜை, அன்னதானம், ராகுகால துர்கா பூஜை, மகரவிளக்கு பெருவிழா, 1008 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. திருவிளக்கு பூஜையை  நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆஸ்ரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி நடத்தினார்.
புதன்கிழமை சிறப்பு தீபாராதனை, அம்மனுக்கு பொங்காலை, உச்ச பூஜை, அன்னதானம்,  லட்சுமி பகவதியப்பன் தலைமையில் சுமங்கலிபூஜை ஆகியவை நடைபெற்றன. 
சுமங்கலி பூஜையில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளர்  நீலாகங்கா பங்கேற்றார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
வியாழக்கிழமை சிறப்பு தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அன்னையிடம் ஒரு பிரார்த்தனை குழுவினரின், சாஸ்தாவிடம் ஒரு வேண்டுதல் நிகழ்ச்சி பத்மநாபபுரம் சுயம்பிரகாச ஆசிரமம் சக்தி ஸ்ரீஜெயசங்கர் ஜி வழிகாட்டுதலில் நடைபெற்றது.   
ஏற்பாடுகளை கோயில் தலைவர் ராஜன், செயலர் வேலு, பொருளாளர் முருகன், துணைத் தலைவர் சுந்தர்ராஜ், துணைச் செயலர் ரமேஷ், சட்ட ஆலோசகர் ரவிகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com