தொழிலாளர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்டத்தில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


குமரி மாவட்டத்தில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் பீடி, சுண்ணாம்புகல், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2019-20ஆம் நிதியாண்டில் ரூ. 250 முதல் ரூ. 15 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ஆம் தேதி முதல் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களுக்கென தனியாக தொடங்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அவை தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை, சேமிப்புக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  தேசிய கல்வி உதவித்தொகை வலை தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். 
விண்ணப்பங்கள் அக். 31ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நலஅமைப்பு, 8-2 ஏ செயின்ட் தாமஸ் சாலை, மேட்டுத்திடல், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627011 என்ற முகவரியிலோ,  மின்னஞ்சல் முகவரி மற்றும் 0462-2578266 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com