கோவில்பட்டியில் கூட்டுறவு வார விழா

அறுபத்து ஐந்தாவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கோவில்பட்டி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்றது. 

அறுபத்து ஐந்தாவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கோவில்பட்டி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்றது. 
   மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி  கொடியேற்றி,   விழாவை தொடங்கி வைத்தார்.   வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)  சாந்திராணி, சங்க வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.   அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.  மங்கலம்,  ஊட்டி டீ போன்ற 10-க்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  கூட்டுறவு வார உறுதிமொழியேற்கப்பட்டது. வேளாண் அலுவலர் பாலமுருகன் விளக்கிப் பேசினார்.    நாலாட்டின்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 8 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.   6  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க லாபத்தில் இருந்து ரூ. 7,32,400   கூட்டுறவு ஆராய்ச்சி- வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதி வழங்கப்பட்டது. 
 விழாவில், கோவில்பட்டி சரக கூட்டுறவு துணைப் பதிவாளர் ஜெயசீலன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அருள் ஜேசு, இணைப் பதிவாளர் ரவிசந்திரன், துணைப் பதிவாளர் கோமதிநாயகம், 
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண் இயக்குநர் செல்வகோகிலா,  சார்பதிவாளர்கள் ஜெயமணி, முருகவேல், குருசாமி, செண்பகவல்லி, முருகன், அக்னி முத்துராஜ், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com