வனத்திருப்பதி கோயிலில் பவித்ரோத்ஸவம் நாளை தொடக்கம்

நாசரேத் அருகே உள்ள  வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்  

நாசரேத் அருகே உள்ள  வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்  ஞாயிற்றுக்கிழமை  (நவ.18) தொடங்கி புதன்கிழமை (நவ.21) வரை  4 நாள்கள் நடை பெறுகிறது. 
   இதையொட்டி, கோயிலில் தினமும் காலை,  மாலையில் ரிக்,  யஜூர்,  சாம வேத பாராயணமும்,  திவ்ய பிரபந்த சேவை சாத்துமுறையும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை  காலை மூலவர் திருமஞ்சனம்,  81 கலச அபிஷேகமும்,  மாலையில் அனுக்ஞை ம்ருத்சங்க்ரஹணம்,  பூமி பூஜை ,  வாஸ்து பூஜை திக்பந்தனம் ஆகியன நடைபெறும். தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் தினமும் நடைபெறும். 
நிறைவு நாளான  புதன்கிழமை (நவ.21) காலையில் விஷ்ணுபதி யாகசாலை பூஜைகள்,  திருவாராதன பூர்த்தி, சுவாமி ஸ்ரீ சீனிவாச பெருமாள் கருடவாகனத்தில் வீதி புறப்பாடு, தீர்த்த வாரி சேவை,  சாத்துமுறை நடைபெறுகிறது.  மாலையில் ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 
கார்த்திகை 1ஆம் தேதி  முதல் மார்கழி 29ஆம் தேதி வரை தினமும் காலை 6  மணி முதல் இரவு 9  மணிவரை தொடர்ந்து நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com