"மக்கள் நீதிக் கொற்றம்' - புதிய அமைப்பு தொடக்கம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் வகையில் மக்கள் நீதிக் கொற்றம் என்ற புதிய அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் வகையில் மக்கள் நீதிக் கொற்றம் என்ற புதிய அமைப்பு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
   ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 9 அமைப்புகள் இணைந்து மக்கள் நீதிக் கொற்றம் என்ற புதிய அமைப்பை சனிக்கிழமை தொடங்கினர். 
 இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு சனிக்கிழமை அளித்த பேட்டி:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் வகையில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, தமிழர் மீட்பு களம், தமிழ் தன்னுரிமை கழகம், தமிழ் தேசிய விடுதலை கழகம் உள்ளிட்ட 9 அமைப்புகள் இணைந்து "மக்கள் நீதிக் கொற்றம்' என்ற பெயரில் கூட்டமைப்பை தொடக்கி உள்ளோம்.
   இந்த அமைப்பின் சார்பாக, முதல்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சென்னையில் டிசம்பர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் செயற்பாடு ஆய்வு ஆணையம் அமைத்து அறிக்கை பெற்று, சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றி புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்றார் அவர்.
  பேட்டியின்போது, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி தலைவர் நல்வினைசெல்வன், மாநில அமைப்பாளர் தமிழ்வாணன், தமிழர் மீட்புக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கரிகாலன், மக்கள் நீதிக் கொற்றம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசெல்வம், நடராஜன் ஆகியோர் 
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com