சூரன்குடி அருகே வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்

சூரன்குடி அருகே இ. வேலாயுதபுரத்தில் கார் மோதி பெண் இறந்ததையடுத்து, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம்


சூரன்குடி அருகே இ. வேலாயுதபுரத்தில் கார் மோதி பெண் இறந்ததையடுத்து, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூரன்குடி அருகே இ.வேலாயுதபுரத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை மனைவி செல்வி (45). இவர் ஞாயிற்றுக்கிழமை விவசாயப் பணிக்கு சென்று வீட்டு, மாலையில் இ. வேலாயுதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது கன்னியாகுமரியிலிருந்து ராமநாதபுரம் சென்ற கார், செல்வி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு திரண்ட இ.வேலாயுதபுரம் பகுதி மக்கள், சடலத்துடன் கிழக்கு கடற்கரை சாலையோரம் இ.வேலாயுதபுரத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கிராம மக்களிடம் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். வேகத்தடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக சூரன்குடி போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த உஸ்மான் அலியிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com