தூத்துக்குடியில் ரூ. 58.65 லட்சம் நலத்திட்ட உதவி அளிப்பு

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 193 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.58.65 லட்சம் மதிப்பில்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 193 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.58.65 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில்,  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 80 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.52,862 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்களையும்,  52 பயனாளிக்கு தலா ரூ.9,900 மதிப்பில் காதொலி கருவிகளையும்,  35 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.4,180 மதிப்பில் தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
 மேலும், 26 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவியாக ரூ.9,75,000 என மொத்தம் 193 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58.65 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்,  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என். சின்னத்துரை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கால்நடை பன்முக மருத்துவமனை: தொடர்ந்து,  தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஜி. பிரேமா,  தூத்துக்குடி கால்நடை பன்முக மருத்துவமனை முதன்மை கால்நடை மருத்துவர் சந்தோஷம் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com