தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 பெண்களின் திருமணத்துக்கு 12 கிலோ தங்கம் வழங்கல்: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 பெண்களின் திருமணத்துக்கு 12 கிலோ தங்கமும், ரூ. 5.76 கோடியும்  நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 பெண்களின் திருமணத்துக்கு 12 கிலோ தங்கமும், ரூ. 5.76 கோடியும்  நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் படித்த ஏழை பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 708 ஏழை பெண்களுக்கு ரூ.2.69 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி தொகையும், ரூ.1.70 கோடி மதிப்பில் 5.6 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல,  இரண்டாம் கட்டமாக 792 ஏழை பெண்களுக்கு ரூ. 3.07 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி தொகையும்,  ரூ.1.90 கோடி மதிப்பில் 6.3 கிலோ தங்கம் என மொத்தம் 1,500 நபர்களுக்கு ரூ.5.76 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி தொகையும், ரூ.3.60 கோடி மதிப்பில் 12 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com