தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.29இல் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 29) நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 29) நடைபெறுகிறது.
 இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க (துடிசியா) பொதுச் செயலர் ராஜ் செல்வின் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு நிறுவனமான சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து தொழில் முனைவோரை உருவாக்கும் பயிற்சியை ஜன. 29 ஆம் தேதி முதல் துடிசியா சார்பில் நடைபெறுகிறது.
 இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிர்பார்ப்புகள், தேவையான அரசு பதிவுகள், மார்க்கெட் சர்வே, தொழிற்சாலை மின் இணைப்பு பெறும் முறைகள், கணக்கு எழுதும் முறைகள், தலைமைப்பண்புகள், இலக்கு நிர்ணயித்தல், நிதி நிர்வாகம்,  வர்த்தக கணக்கு எழுதும் முறை, மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், காப்பீடு முறைகள், தொழிற்சாலைகளை நேரடியாக பார்வையிட அழைத்துச் செல்லுதல், வெற்றி பெற்ற தொழலதிபர்களிடம் நேரடியாக கலந்துரையாடல், போன்றவை நடத்தப்பட உள்ளன.
 பயிற்சியின் முடிவில் தமிழக அரசு பயிற்சி சான்றிதழ் வழங்குகிறது. 
புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு அரசு வழிகாட்டுதலின்படி ரூ. 5 கோடி வரை மானிய கடன் பெற்று தொழில் தொடங்க பயிற்சி வரப்பிரசாதமாகும். 
  எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதுக்குள்பட்ட தொழில் தொடங்க ஆர்வமுள்ள ஆண், பெண் இருபாலாரும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
 பயனாளிகள் தூத்துக்குடி அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.  விண்ணப்பத்துடன் புகைப்படம் மற்றும் ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
 இலவச விண்ணப்பம் மற்றும் ஆலோசனைகள் பெற தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துடிசியா அலுவலகத்தை ஜனவரி 24 ஆம் தேதிக்குள் தொடர்புகொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு 0461-2347005 என்ற தொலைபேசி எண்ணிலும், 98401 58943 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com