கயத்தாறில் வாகனச் சோதனை: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார்

கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
தூத்துக்குடி நில எடுப்பு வட்டாட்சியரும்,  கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான லெனின் தலைமையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ், போலீஸார் சுரேந்தர், ஜெகன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கயத்தாறு சுங்கச்சாவடியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.  அதையடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதை கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டம், கீழநெடுங்கல் பள்ளிப்பட்டு வட்டத்தைச் சேர்ந்த ரா.சூரிபாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com