தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 18.50 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இதுவரை ரூ. 18.50 லட்சம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இதுவரை ரூ. 18.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 14 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1,618 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 9,257 ஆசிரியர்கள், ஊழியர்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். 
அவர்களுக்கு மார்ச் 24 ஆம் தேதி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்தல் பணிக்காக 160 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் ரூ.18.50 லட்சம் ரொக்கமும், ரூ. 4.41 லட்சம் மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
தூத்துக்குடியில் வட்டாட்சியர் சித்ரா தலைமையிலான பறக்கும்படை குழுவினர் ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்ட 50 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com