விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல்: 2ஆவது நாளிலும் மனு தாக்கல் இல்லை

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, புதன்கிழமையும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, புதன்கிழமையும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்கியது. வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களையும், உறுதிமொழி படிவங்களையும் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 5 பேரும், இரண்டாம் நாளான புதன்கிழமை 3 பேரும் வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால் இரண்டு நாள்களிலும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com